கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2021-06-10 20:51 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தினசரி கொரோனாத் தொற்று 35 ஆயிரம் என்ற உச்சத்துக்கு சென்று, இப்போது அதில் பாதியாக குறைந்திருக்கிறது என்பது உண்மைதான். இது அரைகுறை ஊரடங்கால் கிடைத்த அரைகுறை பலனாகும். கடந்த ஒரு மாதத்தில் ஊரடங்கு கடுமையாக செயல்படுத்தப்பட்டிருந்தால், கொரோனா தொற்று பரவல் இப்போது கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஊரடங்கு முறையாக செயல்படுத்தப்படாததால் தான் தொற்று பரவலை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இனி வரும் நாட்களிலும் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படாவிட்டால் அடுத்த சில நாட்களில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதை மறுக்க முடியாது. இதை அரசும், பொதுமக்களும் உணர வேண்டும்.

கொரோனா ஆபத்திலிருந்து நாம் தப்பிக்க இன்னும் பல மாதங்களோ, சில ஆண்டுகளோ ஆகலாம்.

எனவே, தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி ஊரடங்கை கடுமையாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டு மக்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் வந்தாலும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்