சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் புதிய விதிகளை எதிர்த்து வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் புதிய விதிகளை எதிர்த்து வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2021-06-10 21:57 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘சமூக வலைதளங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதைத்தொடர்ந்து முகநூல், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப விதியை கொண்டு வந்தது. இந்திய அரசியல் சாசனம் வழங்கி உள்ள தனி மனித சுதந்திரத்தை தணிக்கை செய்யும் வகையிலும், தனி மனித உரிமையை பாதிக்கும் வகையில் இந்த விதிகள் அமைந்துள்ளன. எனவே, இந்த புதிய விதி சட்டத்துக்கு புறம்பானது என்று அறிவிக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், இதுதொடர்பாக மத்திய அரசு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்