நீலகிரி பகுதியில் யானைகளின் வழித்தடத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு

நீலகிரி பகுதியில் யானைகளின் வழித்தடத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்.

Update: 2021-07-25 03:00 GMT
சென்னை,

கோவை மலை அடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி யானைகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி பகுதியில் யானைகளின் வழித்தடம் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை கண்டறியவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி பழையநிலைக்கே கொண்டுவரவும் சர்வதேச அளவிலான நிபுணர்கள் மற்றும் உலக வனவிலங்கு நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஆய்வை மேற்கொள்ள இருப்பதாகவும், அந்த அறிக்கையை சமர்ப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் 2-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்