மதுரையில் கடந்த 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள் பதிவு

மதுரையில் கடந்த 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-17 11:04 GMT
மதுரை,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு திருமணம் நடத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் மதுரையில் கடந்த 8 மாதங்களில் மகளிர் காவல் நிலையங்களில் மட்டும் மொத்தம் 165 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மதுரை நகரில் 8 வழக்குகள், தெற்குவாசலில் 6 வழக்குகள், தல்லாகுளம் பகுதியில் 15 வழக்குகள், திருப்பரங்குன்றத்தில் 11 வழக்குகள் என மாநகர் பகுதிகளில் மொத்தம் 95 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. 

மதுரை புறநகர் மற்றும் ஊரக பகுதிகளான திருமங்கலத்தில் 22 வழக்குகள், மேலூரில் 9 வழக்குகள், உசிலம்பட்டியில் 6 வழக்குகள், ஊமச்சிகுளம் பகுதியில் 9 வழக்குகள், சமயநல்லூரில் 14 வழக்குகள், பேரையூரில் 10 வழக்குகள் என மொத்தம் 70 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுமட்டுமின்றி 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்