வேளாண் பட்ஜெட்டில் பனைக்கு முக்கியத்துவம்: மு.க.ஸ்டாலினுக்கு குமரிஅனந்தன் பாராட்டு

வேளாண் பட்ஜெட்டில் பனைக்கு முக்கியத்துவம்: மு.க.ஸ்டாலினுக்கு குமரிஅனந்தன் பாராட்டு.

Update: 2021-08-20 00:02 GMT
சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், பனைமரத்தொழிலாளர் நல வாரிய முன்னாள் தலைவருமான குமரி அனந்தன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேளாண்மைக்கு தனிச்சிறப்பு கொடுத்து தனி பட்ஜெட் கொண்டு வரச்செய்த தமிழக முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன். வேளாண் பட்ஜெட்டில் பனைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்திற்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். 76 லட்சத்திற்கு மேற்பட்ட பனை விதைகளை எங்கும் இலவசமாக வழங்கவும், 1 லட்சம் பனை மரக்கன்றுகளை நடவும், ரேஷன் கடைகளில் கருப்பட்டி மற்றும் பனைப் பொருட்களை விற்கவும் முடிவெடுத்திருப்பது எங்கள் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவதாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மனைவி இறந்த சோகத்துக்கு மத்தியிலும் குமரிஅனந்தன் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை அவருக்கு பனை மீது இருக்கும் ஈர்ப்பை பறைச்சாற்றுவதாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்