கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; கேரள எல்லையில் கோவை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பினை முன்னிட்டு கேரள எல்லையில் கோவை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.

Update: 2021-09-06 11:06 GMT


கோவை,

கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து காணப்படுகிறது.  கொரோனா 2வது அலை நாட்டில் குறைந்து வரும் சூழலில் கேரளாவில் தொடர்ந்து 20 ஆயிரம் வரை பாதிப்பு உறுதியாகி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிப்பினை முன்னிட்டு கேரள எல்லையை ஒட்டிய தமிழக பகுதியில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, கேரளாவின் கோழிக்கோடு நகரில் நிபா வைரசின் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளது.  நிபா, ஜிகா அல்லது டெங்கு ஆகிய பாதிப்புகளை அடையாளம் காண சுகாதார துறைக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

இதேபோன்று வாளையார் சோதனை சாவடிக்கு சமீரன் நேரில் சென்று நிபா வைரஸ் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்