அரசுப்பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும்: தமிழக அரசு

அரசுப்பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

Update: 2021-09-13 07:58 GMT
சென்னை,

அரசுப்பணி நியமனங்களில் மகளிர் இட ஒதுக்கீடு  40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று  மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இது குறித்த அறிவிப்பை  வெளியிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:- 

அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து  40 சதவீதமாக உயர்த்தப்படும். கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசுப்பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். 

அதேபோல், முதல் தலைமுறை பட்டதாரி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். போட்டித்தேர்வுகள் தாமதம் ஆனதால், நேரடி நியமனங்களில் வயது உச்ச வரம்பு 2 ஆண்டாக அதிகரிக்கப்படும். தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் ஆக்கப்படும்” என்றார். 

மேலும் செய்திகள்