மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல்

மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் .

Update: 2021-09-21 03:21 GMT
சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த எல்.முருகனும் ஒருவர். எல்.முருகனுக்கு மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை மந்திரி பதவி வழங்கப்பட்டது.

பொதுவாக, மத்திய மந்திரியாக நியமிக்கப்படுபவர்கள், மக்களவையிலோ, மாநிலங்களவையிலோ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எல்.முருகன் எந்த அவையிலும் உறுப்பினராக இல்லாத நிலையில், மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கான தேர்தலில் அவர் போட்டியிட்டாக வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் தற்போது 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடங்கள் காலியாக இருந்தாலும், இங்கு பா.ஜ.க.வுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள்தான் இருக்கிறார்கள். இதனால், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லாத நிலையில், எல்.முருகன் எந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அவர், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டார்.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். 

மேலும் செய்திகள்