காவலர் வீரவணக்க நாள்; டி.ஜி.பி. சைலேந்திர பாபு மரியாதை செலுத்தினார்

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மரியாதை செலுத்தினார்.

Update: 2021-10-21 05:20 GMT
சென்னை,

பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21–ந்தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன் படி நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  

இதனை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு தூணில் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்காக காவல் ஆணையர் சங்கர் ஜிவால், முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். அதன்பின் 132 குண்டுகள் முழங்க காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 

நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேசியதாவது:- மக்கள் அமைதியாக, சுதந்திரமாக வாழ காவல்துறை அதிகாரிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டார். தீவிரவாதத்தை எதிர்த்தும் காவலர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர் என்றும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நினைவு கூர்ந்தார்.

மேலும் செய்திகள்