ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: அருவிகளில் குளிக்க தடை

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-23 10:13 GMT
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரி ஆறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவை உள்ளன. இங்கு தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வார்கள். மேலும் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றைக் காண, சீசன் காலங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பென்னாகரம், ஒகேனக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 7,500 கன அடியில் இருந்து 27,000 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து உயர்வால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்