தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 809- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-11-15 13:47 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை  மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 809- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,15,632 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 1,01,070- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும்  122- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 128- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. 

கொரோனா பாதிப்புக்கு மேலும் 12-பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36, 296- ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 5- பேரும் தனியார் மருத்துவமனைகளில் 7-பேரும் உயிரிழந்துள்ளனர். 

மேலும் செய்திகள்