கரூரில் குற்றங்களை தடுக்க 100 அதிநவீன கேமரா - அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூர் மாநகராட்சியின் பல்வேறு முக்கிய பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் 100 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Update: 2021-12-05 05:42 GMT
கரூர்,

சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை எளிதில் கண்டறிவதற்கும் கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் போலீசாரால் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் பல்வேறு நகரங்களிலும் குற்றங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் 100 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கரூர் மாவட்ட வர்த்தகம், தொழில் கழகம் மற்றும் காவல்துறை இணைந்து 100 அதிநவீன கேமராக்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த கேமராக்களின் பயன்பாட்டை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். 

மேலும் செய்திகள்