பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து

பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

Update: 2022-01-01 05:14 GMT


சென்னை,

பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று, உலகளவில் வல்லரசாக்கும் முயற்சியில் வெற்றி பெற்று கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு எனது இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

நவீன இந்தியாவின் இரும்பு மனிதராய் திகழும் மாண்புமிகு மத்திய உள்துறை மந்திரி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.



மேலும் செய்திகள்