தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு...?

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-01-05 08:39 GMT
சென்னை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று  ஒருநாள் பாதிப்பு ஆயிரம் உயர்ந்து, புதிதாக 2,731 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் நேற்றுமுன்தினம் 876 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இது 1,489 ஆக அதிகரித்துள்ளது.
 
இதையடுத்து கொரோனா பரவல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக்குப் பின் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலானால், அத்தியாவசிய தேவைகள் தவிர மற்றவைக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்