வண்டலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு: கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

வண்டலூரில் உள்ள பேருந்து நிலையத்தில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பஸ்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Update: 2022-01-13 06:22 GMT
சென்னை,

பொங்கல் பண்டிகளை நாளை கொண்டாடப்பட்ட உள்ள நிலையில் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கூட்டம் அதிகமாக உள்ளதால் இதை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், சென்னை வண்டலூர் பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இன்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, 5 ஆம்னி பஸ்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் பயணிகளை ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 5 ஆம்னி பஸ்களுக்கும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர். 

மேலும் செய்திகள்