மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-04 16:10 GMT
பெட்ரோல், டீசல் விலையேற்றம், மின்கட்டண உயர்வு, மின்துறை தனியார் மயமாக்குதல் உள்ளிட்டவைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பாகூர் மின்துறை அலுவலகம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையொட்டி பாகூர் சிவன் கோவில் அருகிலிருந்து டி.வி, மிக்சி, மின்விசிறி உள்ளிட்டவற்றை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டு பாகூர் கடைவீதி வழியாக மின் துறை அலுவலகம் சென்றனர். அலுவலகம் எதிரே வீதியில் மின்சார பொருட்களை வைத்து மின்கட்டணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் மின்துறையை தனியார் மயமாக்குதலை கைவிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். கொம்யூன் குழு நிர்வாகிகள் கலைச்செல்வன், வடிவேலு, கலியன், மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கொம்யூன் குழு உறுப்பினர்கள் சேகர், அரிதாஸ், கவுசிகன், கிளை செயலாளர்கள் வெங்கடாசலம், வளர்மதி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்