2-வது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்

கறம்பக்குடியில் 2-வது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-09-17 00:10 IST

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி கறம்பக்குடி பகுதி பொதுமக்கள் சார்பில் வள்ளுவர் திடலில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நேற்று 2 நாளாக தொடர்ந்தது. இதில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்