மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது
ரிஷிவந்தியம் பகுதியில் மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது;
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி தலைமையில் போலீசார் காட்டுச்செல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வீட்டின் பின்புறம் மது பாட்டில் விற்றுக் கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் சக்திவேல்(வயது 41) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
இதே போல் லாலாபேட்டை பகுதியில் பகண்டை கூட்ரோடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது வீட்டில் வைத்து மது பாட்டில் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சங்கர்(46) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஏந்தல் கிராமத்தில் மதுபாட்டில் விற்ற முருகேசன் மகன் ஏழுமலை(20) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.