காஞ்சீபுரம் அருகே 11½ டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே 11½ டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-29 10:43 GMT

ரேஷன் அரிசி கடத்தல்

காஞ்சீபுரத்தை அடுத்த ஒலிமுகமதுபேட்டை பகுதி தனியார் அரிசி ஆலையில் இருந்து, ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கர்நாடக மாநிலத்துக்கு கடத்துவதாக காஞ்சீபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் குடிமைப்பொருள் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் ஆபாஷ்குமார், கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர்.

கைது

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவ் தலைமையில் நேற்று, காஞ்சீபுரத்தை அடுத்த ஒலிமுகமதுபேட்டை ரோட்டுத்தெருவில் உள்ள தனியார் அரிசி ஆலையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு மினிலாரியில் 26 கிலோ எடைகொண்ட 440 மூட்டைகளில் மொத்தம் 11.44 டன் எடை கொண்ட ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மினிலாரி மற்றும் கிடங்கி்ல் இருந்த ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 32), உதயகுமார் (37), ராஜதுரை (24) ஆகியோரையும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்