ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது

ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-07 09:19 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ் கண்காணிப்பாளர் கீதா மேற்பார்வையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில், திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் ரெயில்வே போலீசார் நேற்று கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற கும்மிடிப்பூண்டி எளாவூர் அடுத்த சின்ன ஓபுலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 54), மதுரை பில் தோட்டம், காந்திநகரை சேர்ந்த மதிவாணன் (55) ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து அவர்களிடம் இருந்த 3½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் திருவள்ளூர் நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்