வெந்நீர் பானையில் தவறி விழுந்த 3 வயது குழந்தை சாவு

வெந்நீர் பானையில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2022-11-30 19:23 GMT

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தவேலு (வயது 30). கொத்தனார். இவருடைய மனைவி ராஜேசுவரி. இவர்களுடைய 3 வயது குழந்தை தனுஸ்ரீ. சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே அடுப்பில் ராஜேசுவரி வெந்நீர் வைத்துக்கொண்டிருந்தார். அப்போது குழந்தை தனுஸ்ரீ, அங்கிருந்த படிக்கட்டு வழியாக வந்தபோது, திடீரென தடுமாறி வெந்நீர் வைத்திருந்த பானைக்குள் விழுந்ததாக தெரிகிறது. இதில் உடல் வெந்து காயமடைந்த தனுஸ்ரீயை மீட்டு உடனடியாக காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலன் இன்றி தனுஸ்ரீ இறந்தாள். இந்த விபரீத சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்