420 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 420 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்;

Update:2023-03-28 00:15 IST

அழகியமண்டபம்,

குமரி பறக்கும் படை தாசில்தார் சுரேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ரொந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டாத்துறை பகுதியில் வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தினர். உடனே காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். காரில் அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது அதில் 16 சாக்கு மூடைகளில் 420 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அதை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து 420 கிலோ ரேஷன்அரிசி மற்றும் சொகுசு காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை காப்புக்காடு அரசு குடோனில் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் அரிசியை கடத்தியது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்