நிதி நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.43 ஆயிரம் அபேஸ்

கோவையில் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படுவதாக கூறி நிதி நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.43 ஆயிரம் அபேஸ் செய்த இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-20 20:45 GMT

கோவையில் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படுவதாக கூறி நிதி நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.43 ஆயிரம் அபேஸ் செய்த இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகைகள் அடகு

கோவை காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்(வயது 32) என்பவர், போத்தனூர் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வருகிறேன். எனது நிறுவனத்தில் ஜனா என்ற பெண் ஊழியராக வேலை செய்து வருகிறார். அவரை தொடர்பு கொண்ட மற்றொரு இளம்பெண் தனது 22 பவுன் தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்திருப்பதாகவும், அந்த நகையை மீட்க ரூ.43 ஆயிரம் பணம் தேவைப்படுவதாகவும், நகையை மீட்டதும் உங்களது நிறுவனத்திலேயே அந்த நகையை விற்பனை செய்வதாகவும் கூறினார்.

இளம்பெண்ணுக்கு வலைவீச்சு

மேலும் அவர், தனது குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, அதனால்தான் கேட்கிறேன் என்றும் கூறினார். இதனை உண்மை என நம்பிய ஜனா, ரூ.43 ஆயிரத்துடன் அந்த இளம்பெண் அழைத்த ஒரு வங்கிக்கு சென்றார். அப்போது அங்கு வந்து பணத்தை பெற்றுக்கொண்ட அந்த இளம்பெண் திடீரென அங்கிருந்து மாயமாகிவிட்டார். எனவே அந்த இளம்பெண்ணை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்