ரெயிலில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ரெயிலில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2023-03-21 18:51 IST

ஜோலார்பேட்டை

ரெயிலில் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே ரகசிய தகவலின்பேரில் ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்காக முட்புதரில் இலவச ரேஷன் அரிசி 10 மூட்டைகளில் 500 கிலோ பதுக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோனேரி குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சூர்யா, சீனிவாசன் மகன் வெற்றி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை மேல் நடவடிக்கைக்காக திருப்பத்தூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ெரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்