கோவை கார் வெடித்த வழக்கில் கைதான 7 பேர் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை கார் வெடித்த வழக்கில் கைதான 7 பேர் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் போலீஸ் காவல் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர்.

Update: 2023-02-09 07:22 GMT

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்த வழக்கில் ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேரை என்.ஐ.ஏ.போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவான ஆவணங்கள், முக்கிய ஆதாரங்களை போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கில் 7 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. போலீசார் கடந்த 1-ந் தேதி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன் (23), பைரோஸ் (28), நவாஸ் (26) உள்பட 7 பேரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து 7 பேரையும் என்.ஐ.ஏ. போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை, கோவை, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணைக்கு பிறகு 7 பேரையும் நேற்று பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்