ஓய்வு பெற்ற பெண் அதிகாரியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

ஓய்வு பெற்ற பெண் அதிகாரியிடம் 7 பவுன் சங்கிலி பறித்து சென்றனர்.;

Update:2023-07-24 23:37 IST

புதுக்கோட்டை பழனியப்பா நகரை சேர்ந்த பரமசிவத்தின் மனைவி ரெத்தினம் (வயது 68). இவர் அரசு துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்  இன்று காலை வீட்டின் அருகே நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென ரெத்தினத்தின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடினர். இது தொடா்பாக அவர் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்