முயல் வேட்டையாடிய 7 பேர் சிக்கினர்

வடமதுரை அருகே முயல் வேட்டையாடிய நபர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.;

Update:2023-10-12 05:30 IST

வடமதுரை அருகேஉள்ள மோளப்பாடியூரில் வேட்டை நாய்களை வைத்து சிலர் காட்டு முயல்களை வேட்டையாடுவதாக சென்னை வனபாதுகாப்பு படைக்கு புகார் கிடைத்தது.அவர்கள் அளித்த தகவலின்பேரில், திண்டுக்கல் வனபாதுகாப்பு படை அலுவலர் கிருஷ்ணகுமார், அய்யலூர் வனஅலுவலர் மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி திரிந்த 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், மோளப்பாடியூர் பகுதியை சேர்ந்த முத்து, பழனியாண்டி, மணிகண்டன், கார்த்திகேயன், சுபாஷ், மலையாளம், லோக மணிகண்டன் என்றும், அவர்கள் முயல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.அதனைத்தொடர்ந்து வனத்துறையினர் வழக்குப்பதிவு முத்துவுக்கு ரூ.50 ஆயிரமும், மற்ற 6 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்