8,800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8,800 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Update: 2023-04-09 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், கரியாலூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான 2 தனிப்படை போலீசார் கல்வராயன்மலை பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது எழுத்தூர் மற்றும் குரும்பலூர் ஏரிக்கரை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 39 பிளாஸ்டிக் பேரல்களில் மொத்தம் 8,800 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். அதனை தொடர்ந்து சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருந்தது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்