தொழிலாளியை கத்தரிக்கோலால் குத்திய உறவினர் மீது வழக்கு

தொழிலாளியை கத்தரிக்கோலால் குத்திய உறவினர் மீது வழக்கு;

Update:2022-09-01 01:42 IST
தொழிலாளியை கத்தரிக்கோலால் குத்திய உறவினர் மீது வழக்கு

தக்கலை:

தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு கொல்லாய் காலனியில் வசித்து வருபவர் முருகன் (வயது 56), தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தன்னுடைய பெரியப்பா மகனான அய்யப்பன் (60) என்பவருக்கும் இடையே அங்குள்ள பத்திரகாளி அம்மன் கோவிலை நிர்வகிப்பதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று திக்கணங்கோடு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த முருகனிடம் தகராறில் ஈடுபட்ட அய்யப்பன் திடீரென கையில் வைத்திருந்த கத்தரிக் கோலால் தலை, வயிறு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் நின்றவர்கள் படுகாயமடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீசார் அய்யப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்