பூட்டிய வீட்டுக்குள் 2 சகோதரிகளின் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு - திருவள்ளூரில் பரபரப்பு

தற்கொலையா? அல்லது உணவின்றி உயிரிழந்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-12-14 20:40 IST

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 சகோதரிகள் வசித்து வந்தனர். உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், அவர்கள் இருவர் மட்டும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சமீப காலமாக அவர்களின் வீடு பூட்டப்பட்டு கிடந்துள்ளது.

இது குறித்து அக்கம்பக்கத்தின் அளித்த தகவலின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அந்த 2 சகோதரிகளின் சடலங்கள் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார், இது தற்கொலையா? அல்லது உணவின்றி உயிரிழந்தனரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்