வேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

வேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-09-11 18:45 GMT

வேப்பனப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள யானைகால் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 40), கூலித்தொழிலாளி. இவரும், இவருடைய உறவினர் மணிகண்டனும் (32) கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் வேப்பனப்பள்ளியில் இருந்து நாச்சிகுப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பூதிமுட்லு கிராமத்தின் அருகே சென்ற போது முன்னே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இதில் அண்ணாமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மணிகண்டன் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். அண்ணாமலையை போலீசார் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்