தர்மபுரி அருகே அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி
தர்மபுரி அருகே அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி;
தர்மபுரி அருகே அரசு பஸ் மோதி கல்லூரி கல்லூரி பலியானார்.
கல்லூரி மாணவர்
தர்மபுரி அருகே உள்ள மேக்னாம்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகன் பெரியசாமி (வயது 19). இவர் தர்மபுரி அருகே உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தார்.
இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டார். அப்போது செல்லியம்பட்டி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
விசாரணை
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் அங்கு சென்று பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.