விபத்துகள் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி

ஊட்டியில் விபத்துகள் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-10-17 21:15 GMT

ஆண்டுதோறும் அக்டோபர் 17-ந் தேதி உலக விபத்துகள் குறைப்பு மற்றும் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கலெக்டர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை வழியாக அரசு மகப்பேறு மருத்துவமனையில் பேரணி நிறைவடைந்தது. இதில் மாணவ-மாணவிகள், டாக்டர்கள் உள்ளிட்டோர் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியபடி சென்றனர். தொடர்ந்து தேசிய தன்னார்வ ரத்ததான தினம் மற்றும் உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி, ரத்ததானம் செய்த கொடையாளர்கள் மற்றும் ரத்ததான முகாம்களை சிறப்பாக நடத்திய தன்னார்வலர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை 3, 4 முறை ரத்ததானம் செய்த 45 பேர், ரத்ததான முகாம்களை நடத்திய 42 தன்னார்வலர்களுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அருணா வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பத்மினி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் பழனிசாமி, இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர், தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கண்காணிப்பு அலுவலர் ஜெய்கணேஷ்மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்