செங்கல்பட்டு -மனப்பாக்கம் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு -மனப்பாக்கம் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-22 13:08 GMT

செங்கல்பட்டு,

செங்கல்பட்டில் இருந்து மனப்பாக்கம் வரை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் மாலை நேரங்களில் இயக்கப்படும் பஸ்கள் மிக குறைவாக உள்ளதால் பள்ளி, கல்லூரி முடித்துவிட்டு செல்லும் மாணவ-மாணவிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல குறிப்பிட்ட நேர டவுன் பஸ்சை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த பஸ்சை தவறவிட்டால் ஷேர் ஆட்டோக்களில் தான் செல்லமுடியும் என்ற நிலை உள்ளது.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள், குடும்ப பெண்கள் தினமும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செல்லும் இந்த பஸ்சில் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இதனால் தினந்தோறும் உயிரை பணயம் வைத்தே பல மாணவர்கள் இந்த பஸ்சின் படிக்கெட்டில் தொங்கியபடிபயணம் செய்கின்றனர்.

இதனால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே காலை மற்றும் மாலை நேரங்களில் செங்கல்பட்டு முதல் மனப்பாக்கம் வரை கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்