சிறு வயது கனவை நனவாக்க 68 வயதில் நீட் தேர்வு எழுதிய முதியவர்

தஞ்சையில் 68 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் நீட் தேர்வு எழுதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.;

Update:2022-07-17 22:03 IST

தஞ்சாவூர்,

தஞ்சையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரும், வழக்கறிஞருமான ராமமூர்த்தி என்பவர், மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை எழுதினார்.

தனது சிறு வயது மருத்துவக்கல்லூரி படிப்பை நினவாக்கும் வகையிலும், தற்போதைய மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் 68 வயதில் தான் நீட் தேர்வு எழுதியதாக அவர் தெரிவித்தார்.

கூட்டுறவுத்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராமமூர்த்தி, தான் இதுவரை 28 பட்டங்களை பெற்றுள்ளதாக பெருமையுடன் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்