கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது.;

Update:2022-07-06 22:18 IST


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

அதையடுத்து காலை 10.30 மணி அளவில் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு தீபாரா தனை நடைபெற்று, ஆனந்த தாண்டவம் நடைபெற்றது. இதில் சாமி 3 முறை முன்னும், பின்னும் நடனமாடி பக்தர் களுக்கு காட்சி அளித்தார். இதையே ஆனி திருமஞ்சன தரிசனம் என்பர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதையடுத்து கோபுர தரிசனமும், சாமி வீதி உலா காட்சியும் நடந்தது. இதில் சாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்ததைத். தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்