திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா
திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. ஆர்.கே. பேட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சின்ன நாகப்பூண்டி குமார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில் வக்கீல் நீலகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையில் நடந்த விழாவில் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி தலைவர் ஏ.ஜி. ரவிச்சந்திரன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
திருத்தணி சித்துர் சாலையில் அமைந்துள்ள அண்ணா உருவ சிலைக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.ஹரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட ஆவின் தலைவர் வேலஞ்சேரி சந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசேகர்பாபு, கேபிள் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருத்தணி ம.பொ.சி. சாலையில் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் உருவப்படத்திற்கு திருத்தணி நகர செயலாளர் சவுந்தர்ராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் முனனாள் கவுன்சிலர் ரமேஷ், வட்ட செயலாளர்கள் ஹேமகுமார், ராமசாமி, வக்கீல்கள் மோகன்ராஜ், தியாகராஜன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆரணி பேரூர் தி.மு.க. சார்பில் ஆரணி பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். இதில் ஆரணி பேரூர் அவைத் தலைவர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். பேரூர் துணைச்செயலாளர் கலையரசி, மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் பாலமுருகன், முன்னாள் அவை தலைவர் குருவப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆரணி பேரூர் செயலாளர் முத்து செய்திருந்தார்.
வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவர் பி.என்.ரவிச்சந்திரன், வி.பி.ரவிக்குமார்,
டி.சண்முகம், சிவசங்கர், சிவாஜி, வெங்கடேஷ், மாவட்ட வக்கீல்கள் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எல்லாபுரம் ஒன்றிய 9-வது வார்டு கவுன்சிலரும், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய துணை செயலாளருமான ஜமுனா அப்பன் செய்திருந்தார்.