அரக்கோணம் டி.ஆர்.எஸ். குளோபல் பப்ளிக் பள்ளியில்மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா

அரக்கோணம் டி.ஆர்.எஸ். குளோபல் பப்ளிக் பள்ளியில்மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.;

Update:2023-03-18 23:39 IST

அரக்கோணம்

அரக்கோணம் டி.ஆர்.எஸ். குளோபல் பப்ளிக் பள்ளியில்மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

அரக்கோணம் டி.ஆர்.எஸ். குளோபல் பப்ளிக் பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா துளிசியம்மாள் அரங்கத்தில் நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமத்தின் செயலாளர் டி.எஸ்.ரவிக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஸ்வர்ணலதா முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக அரக்கோணம் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஷேக் மீரான் கலந்து கொண்டு, 80 மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் முதல்வர் சுரேஷ், கல்வி குழு மேலாளர் குமார், என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாக அலுவலர் கோபிநாத், பேராசிரியர் வீரமணி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி நிர்வாக அலுவலர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்