பாப்பாரப்பட்டி பகுதியில்மது பதுக்கி விற்ற 3 பேர் கைது

Update:2023-10-03 00:30 IST

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 20). இவர் பாலக்கோடு மெயின் ரோட்டில் திருமல்வாடி அருகே பிக்கிலி பிரிவு சாலையில் காந்தி பிறந்த நாளான நேற்று மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாப்பாரப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சந்தோஷ் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பாப்பாரப்பட்டி பகுதியில் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி விற்ற அர்ஜூனன் (48), மாதேஅள்ளி கிராமத்தை சேர்ந்த சுதா (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரிடம் இருந்து 157 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்