வாலிபர் போக்சோவில் கைது

காரிமங்கலத்தில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.;

Update:2023-04-13 00:15 IST

காரிமங்கலம்

காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 5-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த முனியப்பன் (23) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என காரிமங்கலம் போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் வழக்குப்பதிவு செய்து மாணவியை மீட்டதுடன் இருவரையும் பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து பள்ளி மாணவியை கடத்தியதாக முனியப்பனை போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் போக்சோ சட்டத்தில் கைது செய்தார். மாணவி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்