இருசன்கொட்டாய் வனப்பகுதியில்50 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; ஒருவர் கைது

Update:2023-05-15 00:30 IST

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே இருசன்கொட்டாய் வனப்பகுதியில் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இருசன்கொட்டாய் வனப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள முட்புதர்களுக்குள் சுமார் 50 லிட்டர் சாராய ஊறல் போட்டு வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். பின்னர் இதுதொடர்பாக இருசன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முனுசாமி (வயது 55) என்பவரை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்