பெண் மீது தாக்குதல்

பெண்ணை 3 பேரும் சேர்ந்து தாக்கினர்.;

Update:2022-07-23 23:28 IST


விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் இளையபெருமாள். இவரது மனைவி காசியம்மாள். மகன் வள்ளல் பெருமான். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். நேற்று முன்தினம் வள்ளல் பெருமானை, அதேபகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 27), அய்யாசாமி, அய்யப்பன் ஆகியோர் சேர்ந்து கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட, காசியம்மாளை 3 பேரும் சேர்ந்து தாக்கினர். இதுகுறித்து அவர் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்