ஈரோட்டில்நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்;

Update:2023-08-12 02:18 IST

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கவுரிசங்கர் தலைமை தாங்கினார்.

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் குறுவட்ட அளவர் மகேஷ்வரனை தாக்கிய முன்னாள் கவுன்சிலரை கைது செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் விஜயராஜன், கோட்ட தலைவர் முத்துராஜ் மற்றும் நில அளவை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்