மதுகுடிக்க பணம் கொடுக்காத முதியவர் மீது தாக்குதல்

மதுகுடிக்க பணம் கொடுக்காத முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-10-12 01:00 IST

ஊத்தங்கரை:-

ஊத்தங்கரை தாலுகா அனுமன்தீர்த்தம் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 62). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை லக்கம்பட்டி பெருமாள் கோவில் அருகில் நடந்து சென்றார். அங்கு வந்த ஆலமரத்துகொட்டாயை சேர்ந்த குமார் (34), ராமசாமி (70) ஆகியோர் பழனியை வழிமறித்து மதுபாட்டில் வாங்குவதற்காக பணம் கேட்டனர். அதற்கு பழனி பணம் கொடுக்க மறுக்கவே, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த பழனி ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவருடைய மருமகன் ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் குமார், ராமசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் உடன் இருந்த சிவா என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்