திருக்கோவிலூர் அருகேஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்அண்ணன், தம்பி மீது வழக்குப்பதிவு

திருக்கோவிலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்கிய அண்ணன், தம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2023-06-07 00:15 IST


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள மனம்பூண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் சாராய பாக்கெட்டுகள் கிடந்துள்ளன. இதுபற்றி அறிந்த மனம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் தயாளன் (வயது 43) அங்கு சென்று பார்த்தார். அப்போது சந்தேகத்தின் பேரில், அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன்கள் விஜயகுமார், முகில் ஆகியோரிடம் அவர் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், முகில் ஆகியோர் சேர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் தயாளனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தயாளன் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார், 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்