அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மக்களிடையே விழிப்புணர்வு

அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மக்களிடையே விழிப்புணர்வு செயல்படுத்தப்படுகிறது.

Update: 2023-04-21 10:58 GMT

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வண்ணம் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வகுப்பறை கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டு 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவு திறன்களை மேம்படுத்துகிறது.

இதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க "மாணவர் சேர்க்கை கொண்டாட்டம்" "விழிப்புணர்வு பரப்புரை" வாகனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு பரப்புரை வாகனம் ஏப்ரல் 17-ந் தேதி முதல் 28-ந் வரை பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் லட்சுமிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து 3 விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தை திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் பாலமுருகன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் கற்பகம், மோகனா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா, வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்