அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கலை கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2023-03-03 00:15 IST

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கலை கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் 100 மாணவர்கள் 10 அரசு பள்ளிகளில் இருந்து வருகை புரிந்தனர். ஆங்கிலத்துறை பேராசிரியர் குரு தேவராஜன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் நான் முதல்வன் திட்டம் குறித்து பேசினார்.

விலங்கியல் துறை பேராசிரியர் கோபிநாத் அனைத்து பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் கல்லூரியில் உள்ள அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் உள் விளையாட்டு அரங்கத்திற்கு அழைத்து சென்று விளக்கி கூறினார். கல்லூரியின் என்.சி.சி. பிரிவு பேராசிரியர் சந்திரசூடன் என்.சி.சி. பிரிவு பற்றியும், பேராசிரியர் கார்த்திகேயன் தேசிய மாணவர் படை குறித்தும், வணிகவியல் துறை பேராசிரியர் ராஜேந்திரன் கல்லூரியில் உள்ள தொழில் மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டு பிரிவு குறித்தும் பேசினர்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர், எஸ்.எஸ்.கோட்டை, முறையூர், நெற்குப்பை, கோட்டயிருப்பு, ஏரியூர், செம்பனூர், சிங்கம்புணரி மற்றும் திருக்கோஷ்டியூர் அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்