விழிப்புணர்வு பேரணி

கடையநல்லூர் அருகே விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது;

Update:2022-09-06 15:15 IST

கடையநல்லூர்:

`மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்', `நெகிழி இல்லா சுற்றுப்புற சூழலை ஏற்படுத்துவோம்', `நம்ம ஊரு சூப்பர்' ஆகியவை பற்றிய விழிப்புணர்வு பேரணி கடையநல்லூர் அருகே திருமலாபுரம் சக்சஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. திருமலாபுரம் சான்றோர் தொடக்கப்பள்ளியில் இருந்து தொடங்கி பஞ்சாயத்து அலுவலகம் வரை பேரணி நடந்தது. பேரணியை பள்ளியின் தாளாளர் நாகராஜன் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் சிவந்தி வழி நடத்தினார். மாணவர்கள் பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இதில் உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, ஆசிரியர்கள் கவிதா, ஜெயந்தி, மஞ்சு, மனோஜ், முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்