டால்பின்நோஸ் பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பா? -போலீசார் விசாரணை
டால்பின்நோஸ் பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பா?- போலீசார் விசாரணை;
குன்னூர்
குன்னூரில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களாக லேம்ஸ்ராக் மற்றும் டால்பின் நோஸ் இயற்கை காட்சி முனைகள் உள்ளன. இந்த பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது. இந்த இயற்கை காட்சி முனைகளை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் டால்பின் நோஸ் பகுதியில் உள்ள கடைக்கு பின்புறம் கஞ்சா செடி வளர்ந்துள்ளதாக மேல் குன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற மேல் குன்னூர் போலீசார் தீவிர விசாரணை மற்றும் ஆய்வுப்பணி மேற்கொண்டனர். விசாரணையில் ஒரு கடைக்கு பின்புறம் 2 கஞ்சா செடிகள் வளர்ந்துள்ளது தெரிய வந்தது. அதனை போலீசார் அகற்றினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.