விழுப்புரத்தில் ரெயில் மோதி தச்சு தொழிலாளி சாவு
விழுப்புரத்தில் ரெயில் மோதி தச்சு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;
செஞ்சி அருகே உள்ள வரிக்கல் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி மகன் சங்கர் (வயது 42). இவர் விழுப்புரம் வண்டிமேடு சீத்தாராம் நகரில் தங்கியிருந்து தச்சு வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வண்டிமேடு பகுதியில் உள்ள ஒரு கடையில் டீ குடித்து விட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக விராட்டிக்குப்பம்- வண்டிமேடு ரெயில்வே கேட்டுக்கு இடையே ராஜம் நகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அவ்வழியாக விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கிச்சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் சங்கர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து விழுப்புரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.